கனடா கனடா நீ அழகு பூஞ்சோலை
என்னுள்ளே என்னுள்ளே தித்திக்கும் தேன் மழை
உன்னை நினைக்கையிலே அம்மம்மா என் நெஞ்சமே
பட்டாம்பூச்சிகளும்தான் சிறகடித்து, இங்கு பறந்திடுமே
என்தன் வாழ்வின் ஒளி தீபம்
அது யாரோ நீ…
கனடா கனடா நீ அழகு பூஞ்சோலை
என்னுள்ளே என்னுள்ளே தித்திக்கும் தேன் மழை
தாழம்பூவ போலுனது வாசம் வசந்தமே
கோடையிலும் சில்லென சாரல் பல பல வீசுமே
பனிமழை பொழிகையில்
என் உள்ளம் பூக்குமே
பஞ்சுபோல் பனி பறந்திட என் நெஞ்சம் பறக்குமே
கனடா கனடா என் கனவம்மா
இந்த மண்ணின் மணம் என்னை கவர்ந்ததம்மா
கனடா கனடா நீ அழகு பூஞ்சோலை
என்னுள்ளே என்னுள்ளே தித்திக்கும் தேன் மழை
வான்குவரில் இயற்கை வளங்கள் கோடி கொட்டி கிடக்குதே
அதை ரசிக்க ருசிக்க பிறப்பு பல பல வேண்டுமே
பனிமலைகளும் அருவியும்
முத்தமிட்டு விளையாடுதே
கார்மேகமும் வனங்களும் புதிர்கள் போடுதே
கனடா கனடா சொல்லம்மா
நாமிங்கு வாழ்வது இறைவரமா
கனடா கனடா நீ அழகு பூஞ்சோலை
என்னுள்ளே என்னுள்ளே தித்திக்கும் தேன் மழை
உன்னை நினைக்கையிலே அம்மம்மா என் நெஞ்சமே
பட்டாம்பூச்சிகளும்தான் சிறகடித்து, இங்கு பறந்திடுமே
என்தன் வாழ்வின் ஒளி தீபம்
அது யாரோ நீ…
Wow! No words to express my appreciation!
ஆங்கிலக் கவிஞர் நீர்
அழகுத் தமிழிலும் ஓர்
அறிஞன் கவிஞன் யான்
என்று ஆழமாய் உரைத்தீர்
அழகாய் வடித்தீர் இன்றோர்
அமுதத் தமிழ் படைப்பு
கனடியத் தமிழர் யாமதைக்
கண்டோம் கோண்டோம் மகிழ்ச்சி!
Wow! No words to express my appreciation!
ஆங்கிலக் கவிஞர் நீர்
அழகுத் தமிழிலும் ஓர்
அறிஞன் கவிஞன் யான்
என்று ஆழமாய் உரைத்தீர்
அழகாய் வடித்தீர் இன்றோர்
அமுதத் தமிழ் படைப்பு
கனடியத் தமிழர் யாமதைக்
கண்டோம் கொண்டோம் மகிழ்ச்சி!
Thanks Uncle! Its all your encouragement!
சிறந்த பண் தொடரட்டும் பண் பணி!
Thanks Mama!