Tamizh 3.0: 4b பண்ணுக்கு பாட்டெழுதுதல் – Lyrics for a Tune 2

படம்: பாம்பே (Movie: Bombay)
பாடல்: கண்ணாளனே (Song: Kannaalane)

கும்சுமு கும்சுமு கும்பு சுப்
கும்சுமு கும்பு சுப்
கும்சுமு கும்சுமு கும்பு சுப்
கும்சுமு கும்பு சுப்
 
சிலுசிலு சிலுவென சாரல் மழையே, எப்ப நீ நின்னிடுவ
குலுகுலு குலுவென வீசும் காற்றே, எப்ப நீ ஓய்ந்திடுவ
கதிரவன் காரன் எப்பானும் வந்தா, வெளியில ஓடிக்க
கதிரவன் தந்த ஒளியும் சூடும், உடம்புல வச்சுக்க
கதிரவன் காரன் எப்பானும் வந்தா, வெளியில ஓடிக்க
கதிரவன் தந்த ஒளியும் சூடும், உடம்புல வச்சுக்க
 
என் கதிரவா, உன்னை பல நாளாக காணவில்லை
என் கண்களில் மண்ணைத் தூவி, நீ எங்கு மறைந்துவிட்டாய்
மேகங்கள் உன்னை தின்றதறியாமலே
அலைபாயும் ஒரு பேதை நானே
எப்போதோ இப்போதோ வருவாயென
வழி மீது விழி வைத்ததாரோ
உன்னை காணவே வாய்ப்பில்லையே
என் வலி தீர வழியென்னவோ
என் கதிரவா…
 
இங்கு கதிறொன்றை காண்பது கொஞ்சம் கொஞ்சம்
பனி மழைச் சாரல் தானே மிஞ்சும்
அவன் முகம் காண ஏங்கும் நெஞ்சம் நெஞ்சம்
கார்மேக கூட்டம் தானே மிஞ்சும்
ரத்தம் உறைந்து விடும்
குளிர் காற்று வந்து வீசுர நேரம்
சித்தம் துடிதுடிக்கும்
குளிர் எலும்புக்குள் நுழைகிற நேரம்
பேராறும்தான், என்ன செய்யுமோ
விடாக்கருப்பாய் குளிர் வந்து தாக்கும் பொழுது
உறைந்த ஆறாகிப் போனேனே நானும்
 
என் கதிரவா, உன்னை பல நாளாக காணவில்லை
என் கண்களில் மண்ணைத் தூவி, நீ எங்கு மறைந்துவிட்டாய்
மேகங்கள் உன்னை தின்றதறியாமலே
அலைபாயும் ஒரு பேதை நானே
எப்போதோ இப்போதோ வருவாயென
வழி மீது விழி வைத்ததாரோ
உன்னை காணவே வாய்ப்பில்லையே
என் வலி தீர வழியென்னவோ
 
கும்சுமு கும்சுமு கும்பு சுப்
கும்சுமு கும்பு சுப்
கும்சுமு கும்சுமு கும்பு சுப்
கும்சுமு கும்பு சுப்
 
சிலுசிலு சிலுவென சாரல் மழையே, எப்ப நீ நின்னிடுவ
குலுகுலு குலுவென வீசும் காற்றே, எப்ப நீ ஓய்ந்திடுவ
கதிரவன் காரன் எப்பானும் வந்தா, வெளியில ஓடிக்க
கதிரவன் தந்த ஒளியும் சூடும், உடம்புல வச்சுக்க
கதிரவன் காரன் எப்பானும் வந்தா, வெளியில ஓடிக்க
கதிரவன் தந்த ஒளியும் சூடும், உடம்புல வச்சுக்க
 
வெள்ளைப் பனி மலைகளோ இங்கு, அழகு அழகு
ஒளி சிகரத்தில் நான் கண்டுகொண்டேன்
பஞ்சுப் படர் பனி தோட்டத்தின் அழகு அழகு
கதிர் வீச்சில் நான் கண்டுகொண்டேன்
வசந்தத்தை நினைக்கயிலே இந்த குளிர் ஒன்றும் குளிரில்லை குளிரில்லை
உள்ளம் கொள்ளை போனால் இந்த பனி ஒன்றும் குறையில்லை குறையில்லை
இயற்கை வளமா இல்லை வாழ்வின் செழிப்பா
இதை எண்ணிக் கொண்டு பனியை ரசித்தேன்
சொர்கம் இதுதானென்றன் தாயகம் மறந்தேன்
 
என் கதிரவா, உன்னை பல நாளாக காணவில்லை
என் கண்களில் மண்ணைத் தூவி, நீ எங்கு மறைந்துவிட்டாய்
மேகங்கள் உன்னை தின்றதறியாமலே
அலைபாயும் ஒரு பேதை நானே
எப்போதோ இப்போதோ வருவாயென
வழி மீது விழி வைத்ததாரோ
உன்னை காணவே வாய்ப்பில்லையே
என் வலி தீர வழியென்னவோ
என் கதிரவா…

2 Replies to “Tamizh 3.0: 4b பண்ணுக்கு பாட்டெழுதுதல் – Lyrics for a Tune 2”

  1. அருமை!
    அழகிய தமிழ்சொல் கோர்க்கும் கவிஞராகிவிட்டீர்கள் சுப்பு!

Comments are closed.