Tamizh, My Native! (தமிழே என் தாய்மொழியே!)

Tamizh, my native tongue
I know you, from when I was in the womb
The language of my thoughts and path
How come you have not bestowed upon
The skills to glorify you by hand?

Tamizh, your contribution to this world
Cannot be measured and confined in a box
You have given this world the sound of “rolling r – zh”
From prose and poetry to dance and drama…
Architecture and medicine; the yogic Siddhars!

Tamizh, you have been in existence
Since time immemorial – and will live
For aeons and aeons to come…
Through the good hearts that strive
To pass you on to generations, yet to come

Tamizh, you are acceptance personified;
Quality, that makes me love you more than ever.
Mother Tamizh – Aren’t you now asking me, why
I need to express you, in the original script
When I can immortalize (you), in a different tongue!

Comments:

#vtwdiscussionforum0001

அன்பார்ந்த வான்கூவர் தமிழ் உலகம் குழும எழுத்தாளர்களே, கவிஞர் – கவிதாயினிகளே, உங்களுக்கோர் நற்செய்தி!
குழுமத்தில் – பலர் நன்கு எழுதுவதாலும், தங்கள் எண்ணங்களை – வெளிப்படையாகக் –
குறித்த பொருள் குறித்து அழகிய தமிழில் விவாதிப்பதாலும்,
இனி வரும் வாரங்களில் –
தற்போது அனைவரும் எழுதிவரும் பதிவுகளோடு – ஏதேனும் ஒரு பொருள் அல்லது தலைப்புக் குறித்து உரைநடையிலோ அல்லது கவிதையிலோ இத்தளத்தில் எழுத வேண்டுகிறோம்.
பலர் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ கொடுத்த கருத்துக்களின்படி –
நமது குழும நண்பர்களில் பலர் –
ஒரு தலைப்பில் ஓரிடத்தில் அமர்ந்து விவாதம் அல்லது குழுப்பரிமாற்றம் செய்து மகிழ விரும்புகின்றனர்.

நேரிடையாகச் சந்தித்து விவாதிப்பதற்கும் கலந்துரையாடுவதற்கும், இடத்தேர்வு, நேரத்தேர்வு ஆகியவை முதலிடம் பெறும் என்பதால், குறைந்தபட்சம், முகநூலில் இந்த கலந்தாய்வை ஆரம்பிக்கலாம் என எண்ணுகிறேன். பின் சில மாதங்களுக்கு ஒருமுறை நேரில் சந்தித்து உரையாடும் நிகழ்வையும் நடத்தலாம்.

ஆகவே எழுத்தாளர்களே, கவிஞர்களே – இனியும் என்ன தயக்கம்?

எழுவீர்…
செல்வீர் கணிணி நோக்கி….
கற்பனைச் சிறகை விரிப்பீர்….
எண்ணங்களையும் கவிதைகளையும் பதிவீர் இக்குழுமப் பக்கத்தில்!

தலைப்பு: தமிழே என் தாய்மொழியே!
உரைநடை அளவு: அதிக பட்சம் ஐந்து வரிகளில் ஐந்து பத்திகளுக்கு மிகாமல்!
கவிதை: இருபது வரிகளுக்கு மிகாமல்!
காலம்: இப்பொழுது முதல் அடுத்த வாரம் வியாழன் (25-5-2017) இரவு 12 மணிவரை (PDT)

பரிசு உண்டா? திருவிளையாடல்!!!!

குறிப்பு: இக்குழுமக் கட்டுரைகள் கவிதைகளை ஒரு பகுதியில் தொகுக்க வேண்டி #VTW #vtwdiscussionforum என்ற hashtag கொடுத்து எழுதவும்.

கூடுமானவரை நேர்மறை எண்ணங்களையும், கருத்துக்களையும் விதைக்கவும்!